A9 வீதியில் விபத்தில் சிக்கிய கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்து
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka Police Investigation
Accident
By Thulsi
கண்டி (A9) வீதியில் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை (21) யாழ்ப்பாணம் - கண்டி (A9) பிரதான வீதியில், மரடன்கடவலையின் மிதிவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச்சென்று கொண்டிருந்த சொகுசு பயணிகள் பேருந்து, முன்னால் வீதியில் வலதுபுறம் திரும்பிக் கொண்டிருந்த லொறியொன்றின் பின்பகுதியில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த பேருந்தின் சாரதி சிகிச்சைக்காக கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்
ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி