அதிவேக நெடுஞ்சாலையில் திடீரேன பற்றி எரிந்த பயணிகள் பேருந்து!
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
கொழும்பிலிருந்து - கதிர்காமம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பண்ண பகுதியில் வைத்து இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
தீ பரவுவதற்கு முன்பே அனைத்து பயணிகளும் ஓட்டுநரும் பாதுகாப்பாக பேருந்திலிருந்து வெளியேறியதால், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்களும் அதிவேக நெடுஞ்சாலை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி