சிறிலங்காவில் 3 பிளிற்ஸ்கிறிக்ஸ்! சுரேஸ்சாலே- ரவிராஜ் -அர்ச்சுனா அதிர்வுகள்!
படித்தவனே பாட்டைக்கெடுத்தான் எழுதியவனே ஏட்டைக்கிழித்தான் என்பது போல சிறிலங்காவின் கருத்துரிமையை உரசும்தளத்தில் நின்றுகொண்டு தமிழரசுமுகங்களே கவசத்தை தேட முனைவது ஊருக்குத்தான் குறித்த சட்டத்துக்கு எதிர்ப்பு உள்ளுர அது தமக்கு விருப்பு என்ற முரண்நிலையை பகிரங்கப்படுத்தியுள்ளது.
இதே நிகழ்நிலைப் காப்புச்சட்டத்தை அரசாங்கம் கொண்டு வரமுனைந்தபோது நாடாளுமன்றத்தின் வாதப்பிரதிவாதங்களில் எதிர்ப்புக்கத்திகளை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் சுழற்றியபோதும் அதில் ஒருவர் தீட்டியமரத்தில் கூர்பார்ப்பது போல இப்போது தமிழ் ஊடகங்கள் மற்றும் தமிழ் ஊடகர்களுக்கு எதிராக இதேசட்டத்தை பிரயோகிக்கத் தலைப்படுகிறார்.
என்ன செய்வது உடையவன் இல்லா சேலை ஒரு முழம் கட்டை என்பது போல முன்னர் உடையவனை ஒழிக்கத்தலைப்பட்டவர்களின் அணியில் இருந்த முகங்கள் எல்லாம் தமிழ்தேசிய அரங்குக்குள் புகுந்து தடிஎடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாவது காலக்கொடுமை.
ஆனால் இவ்வாறு தமிழரசு முகம் யூவடிவம் எடுத்தாலும் இந்தச் சட்டம் ஜனநாயகம் மற்றும் கருத்துரிமைக்கும் பாரிய அச்சுறுத்தல் என்ற நிலைப்பாட்டில் இன்றுவரை ஐ.நா மனித உரிமை பேரவை ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச மன்னிப்புச்சபை மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகிய அமைப்புகள் இறுக்கமாக உள்ளன.
இவ்வாறான தண்டல்கார, சுண்டல்கார முகங்கள் எல்லாம் விரவிவிட் உலகில் இருகோடுகள் தத்துவம் போல தம்மால் உருவாக்கப்படும் நெருக்கடிகளை சிறியதாக காட்டி ஏனைய விடயங்களை பெரிதாக காட்டும் வகையில் சில நகர்வுகள் உள்ளுர் உலக அரங்கில் தொடரும் நிலையில் இந்தவிடயத்தை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |