அவுஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான எரிபொருள் நிலையங்களுக்கு பூட்டு
மத்திய கிழக்கில் நிலவிவரும் போர் சூழலால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் நெருக்கடியின் காரணமாக அவுஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, எரிபொருளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், நாட்டில் உள்ள பல எரிபொருள் நிலையங்களில் இருப்பு தீர்ந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து அவுஸ்திரேலியாவில் எரிபொருள் விலைகளும் கணிசமாக அதிகரித்துள்ளன.
எரிபொருள் விநியோக கட்டுப்பாடுகள்
மேலும் எரிபொருள் வாங்குவதற்காக தேவையற்ற பீதியை ஏற்படுத்த வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு அதிகாரிகள் அறிவிப்பும் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் சில எரிபொருள் நிலையங்களிலிருந்து எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மத்திய கிழக்கில் போர் தொடர்ந்தால் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |