கம்பஹா பகுதியில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் அறுவர் கைது
Sri Lanka Police
Bangladesh
Arrest
By Abi
கம்பஹா - மல்வத்துஹிரிபிட்டிய காவல்துறைபிரிவுக்குட்பட்ட வரபலான பகுதியில், முறையான விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் ஆறு பேரை மல்வத்துஹிரிபிட்டிய காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மல்வத்துஹிரிபிட்டிய காவல் துறையினரால் நேற்று வியாழக்கிழமை (26.03.2026) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என காவல் துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் 21, 23, 34 மற்றும் 41 வயதுடையவர்கள்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மல்வத்துஹிரிபிட்டிய காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி