இளவாலையில் மாணவனுக்கு சிகிச்சை வழங்காமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி!

Sri Lanka Hospitals in Sri Lanka School Children
By Kajinthan Mar 27, 2026 08:51 AM GMT
Report

புதிய இணைப்பு

இளவாலை பிரதேச வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சை வழங்காமையும் வைத்தியர் கடமையில் இல்லாமையும் தொடர்பான செய்தியை அடுத்து இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் விளக்கம் கோரியுள்ளது.

இவ்விளக்கத்தை 30.03.2026 இற்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ். பிராந்திய இணைப்பாளர் தன்.கனகராஜ் தெரிவித்துள்ளார். 

முதலாம் இணைப்பு

யாழ். மாவட்டம் - இளவாலைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மயக்கமுற்ற மாணவனுக்கு  இளவாலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத காரணத்தால் சிகிச்சை வழங்க முடியாமல் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம், நேற்றையதினம் (26.03.2026) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தலைமறைவான அமெரிக்க படையினர்! தேடித்திரியும் ஈரானின் புரட்சிகர காவல்படை

தலைமறைவான அமெரிக்க படையினர்! தேடித்திரியும் ஈரானின் புரட்சிகர காவல்படை

தாதியர் மறுப்பு தெரிவிப்பு 

பாடசாலைக்கு அருகில் உள்ள பிரதேச வைத்தியசாலைக்கு குறித்த மாணவனை கொண்டு சென்ற நிலையில் அங்கு வைத்தியர் இல்லை எனவும் இரண்டு மணிக்கு பின்னரே வருகை தருவார் என வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இளவாலையில் மாணவனுக்கு சிகிச்சை வழங்காமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி! | Ilavaalai School Student Unconscious

இந்நிலையில் மாணவனின் உடல் நிலை கருதி தாதியர் ஒருவரை முதலுதவி செய்யுமாறு ஆசிரியர் ஒருவர் கேட்ட நிலையில் மாணவனுக்கு ஏதாவது நடந்தால் தமக்கு பொறுப்பாகிவிடும் நாங்கள் இதை செய்யமாட்டோம் என மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மற்றுமொரு தரப்புக்கு எரிபொருள் கியூ.ஆர்! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

மற்றுமொரு தரப்புக்கு எரிபொருள் கியூ.ஆர்! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதி

மேலும், மாணவனை அனுப்புவதற்கு வேறு ஏதாவது நோயாளர் காவு வண்டி ஒன்றை ஒழுங்கு செய்து தாருங்கள் என கேட்ட நிலையில் அதுவும் எங்களிடம் இல்லை வேறு நோயாளர் காவு வண்டிகளும் இங்கு வராது என சாதாரணமாக பதில் கூறியுள்ளனர்.

இளவாலையில் மாணவனுக்கு சிகிச்சை வழங்காமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி! | Ilavaalai School Student Unconscious

அதனையடுத்து, வேறு வழி இன்றி மயக்கமடைந்த மாணவனை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து வெளியான தகவல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து வெளியான தகவல்

 

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


   

ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026