தலைமறைவான அமெரிக்க படையினர்! தேடித்திரியும் ஈரானின் புரட்சிகர காவல்படை
ஈரானின் தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க தளங்களில் இருந்த அந்நாட்டு படையினர், தங்களது முகாம்களில் இருந்து வெளியேறி, ஹோட்டல்கள் மற்றும் அலுவலக வளாகங்கள் போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த அறிக்கைகளில், அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரைக் குறிப்பிட்டு, நிலத்தில் செயல்படும் படைத்துறையினர் பலரும் தற்போது தூரத்திலிருந்து பணியாற்றி வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தங்கும் இடங்கள்
ஆனால், போர் விமானங்களை இயக்கும் விமானிகள் மற்றும் அவற்றை பராமரிக்கும் குழுக்கள் மட்டுமே நேரடியாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC), அவர்களின் புதிய தங்கும் இடங்களை கண்டறிய பொதுமக்கள் தகவல் வழங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
பொதுமக்களுக்கும் எச்சரிக்கை
அத்தோடு, அமெரிக்க ராணுவம் பொதுமக்கள் வாழும் இடங்களில் படையினரை தங்க வைப்பதன் மூலம், பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்துவதாக ஈரான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதன்படி, அவர்களுக்கு விடுதிகளில் அடைக்கலம் கொடுக்காமல் இருப்பதும், அவர்கள் இருக்கும் இடங்களிலிருந்து விலகி இருப்பதும் நல்லது என்று பொதுமக்களை ஈரான் எச்சரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |