இலங்கைக்கு கிடைத்த எரிபொருள் கப்பல்! அநுர - மோடி கலந்துரையாடலால் கிட்டிய பலன்
Anura Kumara Dissanayaka
Narendra Modi
Sri Lankan Peoples
India
By Dhilak
இலங்கைக்கு நாளை எரிபொருள் கப்பல் ஒன்று வருகை தரவுள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் விளைவாக இந்த கப்பல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் ஒத்துழைப்பு
20,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் டன் பெட்ரோலை ஏற்றி வரும் அந்தக் கப்பல், நாளை கொழும்பு துறைமுகத்திற்கு வந்து சேரும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானி காரியாலயம் அறிவித்துள்ளது.

நாட்டின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான ஒத்துழைப்பில் இந்த எரிபொருள் ஏற்றுமதி மற்றொரு படியாகும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்