தரை தட்டியது ஹோர்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட பாரிய கப்பல்!
இந்த மாத தொடக்கத்தில் ஹோர்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட தாய்லாந்து சரக்கு கப்பல் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானிய ஊடகமொன்று வெளியிட்ட தகவலின்படி, மயூரீ நாரீ எனப்படும் அந்த கப்பல், கெஷ்ம் தீவுக்கு அருகிலுள்ள ராம்சா என்ற கிராமப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.
இந்த கெஷ்ம் தீவு, ஈரான் கரையோரத்திற்கு அருகில், ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ளது.
கப்பலின் தற்போதைய நிலை
அதனைதொடர்ந்து, அந்த கப்பல் அருகிலுள்ள லராக் தீவுக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், கப்பலின் தற்போதைய நிலை அல்லது அது எவ்வாறு அங்கு மாற்றப்பட்டது என்பது குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

கடந்த மார்ச் 11ஆம் திகதி 23 பணியாளர்கள் கொண்ட இந்த கப்பல் ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்லும் போது தாக்குதலுக்கு உள்ளானது.
குறித்த தாக்குதலில் 3 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டதுடன், மீதமுள்ள 20 பணியாளர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக பெங்காக் நகரத்திற்கு திரும்பியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |