ரெலோ கட்சியின் தலைமைக்கு எதிராக திருமலையில் வெடித்த போராட்டம்

Trincomalee SL Protest Tamil
By Independent Writer Mar 27, 2026 08:21 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report
Courtesy: G.NICKEY THOMSON

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO) கட்சியின் தற்போதைய தலைமையின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதாகவும், உடனடியாக தேசிய மாநாட்டை நடத்தக்கோரியும் திருகோணமலை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

திருகோணமலையில் அமைந்துள்ள வெலிக்கடைத் தியாகிகள் நினைவுத் திறந்தவெளி அரங்கிற்கு முன்னால் இன்று (27) இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கட்சியின் விதிகளின்படி, தற்போதைய தலைமை மற்றும் குழுவினரின் பதவிக்காலம் கடந்த 23.03.2026 அன்றுடன் நிறைவடைந்துவிட்டதாகவும் அவர்கள் தொடர்ந்து பதவியில் நீடிப்பது சட்டவிரோதமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து வெளியான தகவல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து வெளியான தகவல்

நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது

அத்துடன் ஜனவரி மாதம் நடைபெறவிருந்த தேசிய மாநாட்டைத் திட்டமிட்டுத் தள்ளிப்போடுவதன் மூலம், உட்கட்சி ஜனநாயகம் சீர்குலைக்கப்படுவதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ​

ரெலோ கட்சியின் தலைமைக்கு எதிராக திருமலையில் வெடித்த போராட்டம் | Protests In Trinco Against The Telo Leadership

12வது தேசிய மாநாட்டிற்காக 8 மாவட்டங்களில் இருந்தும் புதிய பொதுக்குழு உறுப்பினர்கள் முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு திருகோணமலையில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் தலைமையே நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக உறுப்பினர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர். ​

ஆயுதப் போராட்ட இயக்கமாகத் தொடங்கி, இன்று ஒரு முதன்மையான அரசியல் கட்சியாக இருக்கும் ரெலோ, சமீபகாலமாகத் தேர்தல் மற்றும் நிர்வாக ரீதியாகப் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்து வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

மற்றுமொரு தரப்புக்கு எரிபொருள் கியூ.ஆர்! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

மற்றுமொரு தரப்புக்கு எரிபொருள் கியூ.ஆர்! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை


எதிர்ப்புப் போராட்டம்

தங்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் "சர்வாதிகாரப் போக்குக்கு" எதிராக இந்த எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதாக உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரெலோ கட்சியின் தலைமைக்கு எதிராக திருமலையில் வெடித்த போராட்டம் | Protests In Trinco Against The Telo Leadership

இரத்தம் சிந்தி, ஆயுதம் ஏந்திப் போராடியது நீதிமன்றப் படிகளில் ஏறுவதற்காக அல்ல" எனக் குறிப்பிட்டுள்ள அவர்கள், ஜனநாயகத்தை மதித்து புதிய தேர்வுகளை நடத்தி, உடனடியாக 12வது தேசிய மாநாட்டை கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ​

அத்துடன் மேற்குறித்த விடயங்களை உள்ளடக்கி ரெலோ கட்சியின் திருகோணமலை மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களால் ஒருமித்த கருத்துடன் கண்டன அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

19 Mar, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கேகாலை, அளவெட்டி, வளலாய், Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

தண்ணீரூற்று, திருகோணமலை, Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, Hatton, London, United Kingdom

22 Mar, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Toronto, Canada

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

சுழிபுரம், மலேசியா, Malaysia, இலங்கை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026