ஜெனிவாவில் நிறைவேற்றவுள்ள தீர்மானங்களை நீர்த்துப் போகச் செய்யும் தந்திரோபாயத்தில் கோட்டாபய அரசாங்கம்!
ஜெனிவா அமர்வில் இலங்கை தொடர்பாக பலநாடுகள் நடுநிலமையைப் பேணும் என்ற ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது.
இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக இணை அனுசரணை வழங்கும் நாடுகள் பெரும் முயற்சி எடுத்திருக்கின்றன என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபெற்ற தமிழ்தேசிய கட்சிகள், மதகுருமார்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மத்தியிலான சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அங்கு கருத்துத் தெரிவித்த அவர், நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்வதற்காகவே இலங்கை அரசாங்கம் கட்டாய ஜனாசா எரிப்பு என்ற விடயத்தை நீக்கியிருக்கிறது.
முஸ்லிம் நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் என்ற எண்ணத்தில் இதனைச் செய்திருக்கிறார்கள்.
ஆனாலும் இஸ்லாமிய நாடுகள் தங்களது நிலைப்பாட்டை மாற்றமாட்டார்கள் என்று நம்புகிறோம் .
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரத்தில் சில நாடுகளின் ஆதரவை பெறுவதற்காகவே, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் பேச்சுவார்த்தை என அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது எனவும் சுமந்திரன்