ஆணையாளருக்கு எதிரான தடை எழுத்தாணை கோரி மனு! மட்டக்களப்பு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

srilanka batticaloa sumanthiran
By Vasanth Mar 26, 2021 02:50 PM GMT
Report

மட்டக்களப்பு மாநகர மேயரால், ஆணையாளருக்கு எதிராக தடை எழுத்தாணை கோரி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்று இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் ஆணையாளரிடம் நீதிமன்றத்திற்கு விளக்கமளிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநகர மேயர் சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாநகர மேயரால், ஆணையாளருக்கு எதிராக தடை எழுத்தாணை கோரி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாநகர சட்டத்தின்படி மேயருக்கு இருக்கின்ற அதிகாரங்களை, விரும்பினால் ஆணையாளருக்கு பாரப்படுத்தலாம். அப்படியாக இந்தப் புதிய ஆணையாளர் வந்தபோது 10 அதிகாரங்கள் கையளிக்கப்பட்டிருந்தன.

ஆனால், அதற்குப் பின்னர், கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி இன்னொரு சபைத் தீர்மானத்தின் மூலமாக கையளிக்கப்பட்ட அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டன. அந்த அதிகாரங்களை சட்டப்படி மீளப்பெற்றிருந்தாலும் கூட தான் அதற்கு ஒழுகி நடக்கமடாட்டேன் என்றும் அந்த அதிகாரங்களைத் தானே பயன்படுத்துவேன் என்றும் ஆணையாளர் விடாப்பிடியாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பதன் காரணமாக அவரை அப்படியான செயற்பாட்டில் இருந்து தவிர்ப்பதற்கும் அந்த அதிகாரங்களை அவர் உபயோகிப்பதைச் சட்டப்படியாக நிறுத்துவதற்கும் இவ்வாறு தடுக்கும் எழுத்தாணை கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

இன்றையதினம் இதனை நீதிமன்றத்திலே ஆதரித்த போது, மேயர் மனுதாரராகக் கேட்டுள்ள நிவாரணங்கள் ஏன் வழங்கப்படக்கூடாது என்று கேட்டு அறிவித்தல் அனுப்பும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த அறிவித்தல், ஆணையாளருக்கம் கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி ஆணையாளருக்கும் (இவர் இரண்டாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்) அனுப்பும்படி நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி வியாழக்கிழமை வழக்கினை எடுக்கும்போது அவர்கள் நீதிமன்றத்தில் காரணம் காட்டவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி