முடிந்தால் செய்யுங்கள்...! பகிரங்க சவால் விடும் எம்.ஏ.சுமந்திரன்

Jaffna Gajendrakumar Ponnambalam M. A. Sumanthiran Election General Election 2024
By Thulsi Nov 06, 2024 03:38 AM GMT
Report

தேர்தல் பிரசார மேடைகளில் எனது பெயரைத் தவிர்த்து முடிந்தால் உங்களது தேர்தல் பரப்புரைகளைச் செய்யுங்கள் பார்க்கலாம் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு எம்.ஏ.சுமந்திரன் (MA Sumanthiran) சவால் விடுத்துள்ளார்

யாழ். (Jaffna) வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (5.11.2024) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து முதலில் வெளியேறியவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தான்.

சூடுப்பிடிக்கும் பொதுத் தேர்தல்: தேசிய மக்கள் சக்திக்கு அதிகரித்துள்ள பதற்றம்

சூடுப்பிடிக்கும் பொதுத் தேர்தல்: தேசிய மக்கள் சக்திக்கு அதிகரித்துள்ள பதற்றம்

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களைக் கொன்றழித்த சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுத்தபோது மேடையில் ஒன்றாக இருந்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Hajendrakumar Ponnambalam).

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலின் போது ஆசனப் பங்கீட்டால் ஏற்பட்ட முரண்பாட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு அவர் வெளியேறினார்.

ஆசனம் கிடைக்காததால் சைக்கிள் எடுத்து ஓடிவிட்டு இன்று வரை நாட்டில் நடப்பது எல்லாவற்றுக்கும் தமிழரசுக் கட்சி தான் காரணம் என்று வெற்று அரசியல் நாடகம் போட்டு வருகின்றனர் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்.

உங்கள் கட்சியில் இருக்கும் ஓட்டைகளைப் பார்க்க ஆளில்லை. நீங்கள் தமிழரசுக் கட்சி உடைந்து விட்டதாகக் கண்ணீர் வடிக்கின்றீர்கள்.

வாக்குக்காக மலையக மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் அரசியல்வாதிகள் !

வாக்குக்காக மலையக மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் அரசியல்வாதிகள் !

மணிவண்ணனுக்கு என்ன செய்தீர்கள்

கடந்த முறை உங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்த மணிவண்ணனுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? இந்த முறையும் நீங்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து வாக்குக் கேட்பது எங்கள் கண்ணுக்குத் தெரியாமல் இல்லை.

முடிந்தால் செய்யுங்கள்...! பகிரங்க சவால் விடும் எம்.ஏ.சுமந்திரன் | Ma Sumanthiran Challenge Kajanthirakumar

நீங்கள் உங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள். மக்கள் உங்களுக்குக் கொடுத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்ற பணியைச் செய்தீர்களா என்பதற்கு மக்களுக்குப் பதில் சொல்லுங்கள்.

தொடர்ந்து தமிழரசுக் கட்சியை விமர்சிப்பதை அரசியல் மூலதனமாக்குவது பலிக்காது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இணைந்த வடக்கு - கிழக்குத் தேசமென முழங்கும் நீங்கள் கடந்த தடவை கிடைத்த போனஸ் ஆசனத்தைக் கிழக்குக் கொடுத்தீர்களா? நீங்கள் அதைத் தேர்தலில் தோற்ற உங்கள் கஜேந்திரனுக்குக் கொடுத்து விட்டு வடக்கு - கிழக்கு இணைப்பு எனப் படம் போடுகிறீர்கள்.

கிழக்கில் அவ்வளவு கரிசனையென்றால் நீங்கள் கிழக்குக்கு அந்த நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொடுத்திருப்பீர்கள். உங்களுக்குக் கிழக்கில் கரிசனையில்லை. வாயளவில், தேர்தல் காலங்களில் ‘வவுனியாவில் நிலம் பறிபோகின்றது, மட்டக்களப்பில் நிலம் பறிபோகின்றது’ என்கிறீர்கள்.

குருந்தூர்மலை, வெடுக்குநாரிமலை, கிண்ணியா என்று ஒரு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சட்டத்தரணி கதை அளக்கின்றார். மக்களது வெகுஜனப் போராட்டங்களோடு, அத்தனை நிலங்களையும் வழக்கு வைத்துப் பாதுகாப்பது நாங்கள். வகுப்பெடுத்தவர் ஒரு சட்டத்தரணி. அவரை நான் இவை தொடர்பில் ஒரு நீதிமன்றப் பக்கமும் கண்டதில்லை.

பார் பெர்மிட் விவகாரம்

வழக்காடி வெல்வது நாங்கள். போராடுவது மக்கள். படமெடுத்து பேஸ்புக்கில் போடுவது நீங்கள். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து தேசிய அரசு அமைந்தால் அரசுக்கு ஆதரவளிப்போம்.

முடிந்தால் செய்யுங்கள்...! பகிரங்க சவால் விடும் எம்.ஏ.சுமந்திரன் | Ma Sumanthiran Challenge Kajanthirakumar

ஆனால், நல்லாட்சி போன்று எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்வோம். சார்ள்ஸ் நிர்மலநாதன் பார் பெர்மிட்டுக்குக் கடிதம் கொடுத்தது உண்மையே. அந்த கடிதத்தை ஒழித்து வைத்துவிட்டு இப்போது முடிந்தால் காட்டுங்கள் பார்ப்போம் என்று அவர் சவால் விடுகின்றார். அத்தோடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளார்.

அவரால் ஒன்றும் செய்ய முடியாது. பார் பெர்மிட் விவகாரத்தாலேயே அவர் தேர்தலில் இருந்து தானாக வெளியேறினார். விக்னேஸ்வரனும் போட்டியிடாது வெளியேறினார். அதேபோல் வேறு சிலரும் உள்ளே இருக்கின்றார்கள். அவர்களும் தாமாக வெளியேறினால் நல்லது." - என்றார்.

இலங்கை போரினால் நன்மையடைந்த அரசியல் வாதிகள்: ஹரிணி காட்டம்

இலங்கை போரினால் நன்மையடைந்த அரசியல் வாதிகள்: ஹரிணி காட்டம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்