மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிக்க சிறிநேசன் எம்.பி அரசிடம் கோரிக்கை

Maaveerar Naal
By Thulsi Nov 25, 2024 09:52 AM GMT
Report

தமிழ் மக்களின் விடிவுக்காக போராடிய மாவீரர்களின் துயிலும் இல்லத்தினை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்கள் இம்முறை தமது உறவுகளை நினைவு கூருவதற்கான கெடுபிடிகள் இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் இன்றைய தினம் மட்டக்களப்பின் மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியதுடன் அங்கு முன்னெடுக்கப்படும் ஏற்பாடுகளையும் பார்வையிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் விடுதலை

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், மாவீரர்களின் எண்ணங்களை மனதில் சுமந்தவாறு அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் எண்ணத்துடன் பொதுமக்கள் மாவடி முன்மாரிய மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிக்க சிறிநேசன் எம்.பி அரசிடம் கோரிக்கை | Maaveer Naal Remembrance Day In Batticaloa

எமது மண்ணுக்காக, தமிழ் மக்களின் விடுதலைக்காக தமிழர்கள் இந்த மண்ணில் நிம்மதியாக சுதந்திரக்காற்றினை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக தமது உயிரை அர்ப்பணித்த தியாகதன்மை கொண்ட போராளிகளை நாங்கள் என்றும் மறக்ககூடாது.

அவர்களை மறப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். அந்த வகையில் 2024ஆம் ஆண்டில் கார்த்திகை மாதம் பிறந்துள்ளது.

அந்த மாதம் என்பது தமிழர்களினைப் பொறுத்த வரையில் அந்த தியாகத்தினை நினைவுகூரும் மாதமாகவுள்ளது. அந்த வகையில் இந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் அவர்களின் நினைவினை சுமந்தவாறு நின்றுகொண்டிருக்கின்றோம்.

விசேட அதிரடிப்படையினரின் முகாம்

இதேபோன்று தாண்டியடி, தரவை, கண்டலடி போன்ற இடங்களிலும் துயிலும் இல்லங்கள் காணப்படுகின்றன. இதில் தாண்டியது துயிலும் இல்லம் விசேட அதிரடிப்படையினரின் முகாமாகவுள்ளது.

மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிக்க சிறிநேசன் எம்.பி அரசிடம் கோரிக்கை | Maaveer Naal Remembrance Day In Batticaloa

ஜனநாயக ஆட்சி நடக்கின்ற காலத்தில் துயிலும் இல்லத்தினை இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்து அதில் முகாம் அமைத்து சப்பாத்துகால்களின் கீழ் எமது உறவுகளின் சமாதியை தீண்டிக் கொண்டிருப்பது ஒரு அசிங்கமான செயற்பாடு.

முகாமிலிருந்து அவர்கள் அகற்றப்படவேண்டும் என்று நாங்கள் கோரியிருந்தோம். அகற்றுவோம் என்று சொன்னார்கள் இன்னும் அகற்றப்படவில்லை.

மாவடி முன்மாரியில் உள்ள மாவீரர் துயிலும் உள்ளத்திலிருந்த கல்லறைகள் அகற்றப்பட்டிருந்தாலும் இம்முறை இங்கு ஓரளவு சுதந்திரமாக நினைவேந்தலை செய்யக்கூடிய நிலைமைகள் ஏற்பட்டுள்ளது.

ஒரு விடிவுக்காக போராடியவர்களை நாங்கள் மலினப்படுத்தாமல் அவர்களின் மகத்துவத்தினை நாங்கள் நெஞ்சில் சுமக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிக்க சிறிநேசன் எம்.பி அரசிடம் கோரிக்கை | Maaveer Naal Remembrance Day In Batticaloa

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023