உடுத்துறையில் பெருந்திரள் மக்களுடன் மாவீரர் நிகழ்வுகள் முன்னெடுப்பு
Sri Lankan Tamils
Tamils
Sri Lanka
By Shalini Balachandran
வடக்கு மற்றும் கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன.
இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டனர்.
வடக்கு மற்றும் கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் விடுதலைக்கான பயணத்தில் உயர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு இன்றையதினம் வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் இன்று மாலை 6.05 மணியளவில் மணிஒலி எழுப்பலுடன் தொடங்கி ஒரு நிமிட மௌனவணக்கத்தை அடுத்து 6.07 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்படுமென ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்ததன் பிரகாரம் மாவீரர்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், உடுத்துறை ஆகிய மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 10 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்