ஈழ விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்தோரின் மாண்புமிகு நாள் - கார்த்திகை 27
தமிழரின் விடுதலைக்காக மண்ணில் விதைான மாவீரர்களை நினைவு கூறும் மாவீரர் தினத்திற்கு இன்னும் இருப்பது மூன்று நாட்களே.
மனித இனங்களின் இருப்பு எங்கெல்லாம் உண்டோ அந்த இருப்பின் வரலாற்றுத் தடத்தில் அந்த இனம் சிந்திய உதிரச் சிதறல்களுக்கு இணைப்பும் பிணைப்பும் உள்ளதை அந்த இனத்தின தாய் நிலப்பரப்புக்கள் அறியும்.
இவாறான உதிரச் சிதறல்கள் வெறும் வன்முறை சிதறல்கள் அல்ல. அவற்றின் பின்னால் அர்த்தமுள்ள தியாகங்களும் உள்ளன.
கார்திகை பூக்கள்
இது உலக நீதி மட்டுமல்லாது தமிழர் தாயகம் என்கின்ற புலத்திற்கும் பொருந்தும் நியதியும் கூட. இந்த நியதியை தான் கடந்த 11ஆம் திகதி பொப்பி மலர்களுடன் முதலாம் உலகப்போரின் முடிவுடன் உலகம் நினைவுறுத்தியது.
தமிழர் பரப்பில் இது நவம்பர் 27ல் கார்திகை பூக்களுடன் மாவீரர் நாள் நிகழ்வினை நினைவு கூருவதற்கு காத்துள்ளது.
இந்நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வினை நினைவு கூருவதற்கு தமிழர் தாயக பகுதிகளில் மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.
துயிலும் இல்லங்கள்
அந்த வகையில் மாவீரர் துயிலும் இல்லங்கள் அமையப்பெற்ற இடங்களில் சிவப்பு மஞ்சள் கொடிகள் அந்த மாவீரர்களை அடையாளப்படுத்தி நிற்கின்றன.
தாயக மக்கள் விடுதலைப் புலிகள் ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள்.
ஈழ விடுதலைக்கான போர் மௌனிக்கப்பட்டதன் பின்பு தமிழர் தாயகத்தில் உள்ள மக்கள் யுத்ததில் உயிரிழந்த தமது மக்களை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
திசைகாட்டி அரசாங்கம்
அந்த வகையில் கடந்த கால அரசாங்கங்கள் உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கு மறுப்பு தெரிவித்ததடன், இராணுவத்தின் மற்றும் சட்டத்தின் மூலமாக பல்வேறு இடையூறுகளையும் ஏற்படுத்தியிருந்தது.
இவாறான நிலையில் தற்போது உள்ள திசைகாட்டி அரசாங்கம் ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த ஆண்டு மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்குமா என்றால் அது கேள்விக்குறி தான்.
எத்தனை அரசுகள் வந்தாலும், எத்தனை தலைவர்கள் மாறினாலும் ஈழத் தமிழர்கள் தங்களுக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூருவதற்கு மறக்க மாட்டார்கள் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |