முல்லைத்தீவில் இரவு வேளையில் மாவீரர் நாளுக்கு தடையுத்தரவு பெற நீதிமன்றுக்கு சென்ற காவல்துறை
தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களை போற்றி வணங்குகின்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் கார்த்திகை 27ஆம் திகதி தமிழர் தாயக பகுதி எங்கும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் கார்த்திகை 27 மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
தடை உத்தரவு
இந்நிலையில் பகல் வேளையில் நீதிமன்றத்தை நாடும்போது அங்கு சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகி தடை உத்தரவை வழங்க விடமாட்டார்கள் என்கின்ற ஒரு எண்ணத்தில் திருட்டுத்தனமாக இரவு வேளையில் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறுவதற்காக முல்லைதீவு காவல்துறையினர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
யாழில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கவுள்ளோருக்கான செய்தி:பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட கூடம்
பகல் வேளையில் நீதிமன்ற நடவடிக்கைகள் இருந்தபோதும் நீதிமன்ற தடை உத்தரவை பெற செல்லாத காவல்துறையினர் நாளை(25) நாளை மறுதினம் (26) விடுமுறை நாட்கள் என்பதை கருத்தில் கொண்டு இன்று(24) இரவு வேளையில் சென்று தடை உத்தரவை பெறுவதற்காக முயற்சிக்கின்ற சம்பவமானது தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலே மிகவும் விசனத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் காவல்துறையினர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தற்போது மாவீரர் நாளுக்கான தடை உத்தரவை பெறுவதற்காக அங்கு கூடியிருக்கின்ற நிலையில் இது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |