மாவீரர்நாள் நினைவேந்தலுக்கு கிளிநொச்சியிலும் தடை
police
kilinochchi
court
maveerarnal
By Sumithiran
கிளிநொச்சி மாவட்டத்திலும் மாவீரர்நாள் நினைவேந்தலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் காவல்துறையினரால், 09 பேருக்கு எதிராக இன்று நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.
இதேவேளை தர்மபுரம் காவல்துறையினரால் 02 பேருக்கும், அக்கராயன் காவல்துறையினரால் 02 பேருக்கும், பளை காவல்துறையினரால்10 பேருக்கும் , முழங்காவில் காவல்துறையினரால் 04 பேருக்கும், மருதங்கேணி காவல்துறையினரால் 09 பேருக்கும், பூநகரி காவல்துறையினரால் 07 பேருக்கும், தடையுத்தரவுகள் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு மற்றும் வவுனியா,மன்னாரில் தடைவிதிக்கப்பட்டநிலையில் தற்போது கிளிநொச்சியிலும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.