சுவிஸ் சூரிச் நகரில் சிறப்புற இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு
சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் Kronen Hotel Saal, Wehntalerstrasse 551, 8046 Zürich எனும் முகவரியில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் உட்பட மாவீரர் அனைவரையும் நினைவு கூரும் தமிமீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வானது போராளிகள் கட்டமைப்பினரால் நேற்று (27 11.2026) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
பிற்பகல் 12.30 மணிக்குச் சிறப்புறத் தொடங்கிய இந்நிகழ்வின் முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடி ஏற்றி வைக்கப் பட்டது. தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 2008 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரை திரையில் காட்சிப்படுத்தப் பட்டது.
முதன்மைச் சுடர்
உரை முடிவில் ஒரு நிமிடம் ஒலி எழுப்பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம் நடைபெற்றது. தொடர்ந்து சரியாக பிற்பால் 1.35 மணிக்கு முதன்மைச் சுடர் ஏற்றப்பட சமநேரத்தில் தேசியத் தலைவர் அவர்களிற்கும் மாவீர்களுக்கான சுடர்களை மாவீரரின் பெற்றோர் உரித்துடையோர் ஏற்றினர்.

மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

