ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை: பிரான்ஸ் ஜனாதிபதியின் புதிய நகர்வு
பிரான்ஸ் (France) ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) உலகளாவிய விஞ்ஞானிகளை பிரான்ஸுக்கு வரவேற்பதாக அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் நிதி நிறுத்தங்களை மேற்கொண்டு வரும் நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி உலகளாவிய விஞ்ஞானிகளை ஐரோப்பாவில் பணியாற்ற வருமாறு அழைத்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் தனது எக்ஸ் (X) தளத்திலேயே பதிவிட்டுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதியின் பதிவு
அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, “பிரான்ஸில், ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. புதுமை ஒரு கலாசாரம், அறிவியல் ஒரு எல்லையற்ற வானம். உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களே, பிரான்ஸைத் தேர்ந்தெடுக்குங்கள், ஐரோப்பாவைத் தேர்ந்தெடுக்குங்கள்" என அவர் பதிவிட்டுள்ளார்.
Here in France, research is a priority, innovation is a culture, and science is a boundless horizon. Researchers from around the world, choose France, choose Europe! See you on May 5.
— Emmanuel Macron (@EmmanuelMacron) April 18, 2025
→ https://t.co/a8qXY6issB
இதனையடுத்து, “Choose France for Science” என்ற புதிய தளத்தை பிரான்ஸ் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் French National Research Agency (ANR) உடன் இணைந்து, உலகின் ஏதேனும் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களை வரவேற்க விரும்பும் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவை, அரசிடம் நிதி ஒதுக்கீடு கோர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகளுக்கான பணிவாய்ப்பு
முக்கியமாக, சுகாதார ஆராய்ச்சி, காலநிலை மாற்றம், பல்வேறு உயிரின பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, விண்வெளி ஆய்வுகள், பசுமை எரிசக்தி, மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் பெரிதும் வரவேற்கப்படுவர்.
ஐக்ஸ் மார்சேய் பல்கலைக்கழகம் (Aix Marseille University) தனது "Safe Place for Science" திட்டத்தின் மூலம் ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து வரும் விஞ்ஞானிகளுக்கு பணிவாய்ப்பு வழங்கத் தொடங்கியுள்ளது. பல்வேறு விண்ணப்பங்கள் ஏற்கனவே வந்துள்ளதாக அந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த நடவடிக்கை, அறிவியல் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பிரான்ஸ் அரசின் உறுதியை வெளிப்படுத்துகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
