“எனக்கான நேரம் வரவில்லை” மரணத்தை வென்றவரின் திகில் அனுபவம்!!
accident
madagascar
helihoptor
By Vanan
கிழக்கு ஆபிரிக்காவில் இருக்கும் தீவு நாடான மடகாஸ்கரில் இடம்பெற்ற பயங்கர ஹெலிகொப்டர் விபத்தில் 39 பேர் பலியாகினர்.
அந்தக் ஹெலிகொப்டரில் பயணம் செய்தவர்களில் இருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். அதில் ஒருவர் அந்நாட்டு அமைச்சர் பதவியில் இருக்கும் செர்ஜ் கெல்லே.
இந்த விபத்திலிருந்து உயிருடன் தப்பி பிழைத்த மடகாஸ்கர் நாட்டு அமைச்சர் செர்ஜ் கெல்லே கூறுகையில், “நான் மரணமடையும் நேரம் இன்னும் வரவில்லை” என்று அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செர்ஜ் கெல்லே ஹெலிகொப்டரில் உள்ள ஒரு இருக்கையை பயன்படுத்தி, 12 மணி நேரம் கடலில் நீந்தி உயிர் பிழைத்துள்ளார். அவருடன் சேர்ந்து இன்னொரு நபரும் நீந்திக் கரை சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி