மகிந்தவிற்கு வழங்கப்பட்ட பிரதமர் பதவி! மைத்திரிக்கு அழைப்பாணை

Mahinda Rajapaksa Maithripala Sirisena Ranil Wickremesinghe Prime minister
By Sathangani Jan 30, 2024 05:59 AM GMT
Report

கடந்த 2018ஆம் ஆண்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை அப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன அப்பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளிக்குமாறு பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோருக்கு அழைப்பாணை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மனு தொடர்பான அடிப்படை உண்மைகளை பரிசீலித்த நீதிபதிகளான எஸ். துரைராஜா, குமுதுனி விக்கிரமாதித்தன் மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமனம் 

அதன் பின்னர், குறித்த மனுவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்ததுடன், இந்த மனுவை சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் சமர்ப்பித்திருந்தார்.

மகிந்தவிற்கு வழங்கப்பட்ட பிரதமர் பதவி! மைத்திரிக்கு அழைப்பாணை | Made Mahinda Pm Court Notice To Maithri To Testify

2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு, அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கியதாக மனுதாரர் கூறுகிறார்.

அதன் பின்னரே அந்த பதவிக்கு மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுற்றுலா சேவைக்கான ஜீப் கட்டணம் அதிகரிப்பு

சுற்றுலா சேவைக்கான ஜீப் கட்டணம் அதிகரிப்பு

அடிப்படை மனித உரிமை மீறல்

19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலம் பிரதமருக்கு இருந்த போதிலும், முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை அந்த பதவிக்கு நியமித்தமை அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

மகிந்தவிற்கு வழங்கப்பட்ட பிரதமர் பதவி! மைத்திரிக்கு அழைப்பாணை | Made Mahinda Pm Court Notice To Maithri To Testify

பிரதமரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை எனவும், அப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் அரசியலமைப்பின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளார் எனவும் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கையில் ஐவர் சுட்டுக்கொலை : மேலும் இரு பெண்கள் கைது

தென்னிலங்கையில் ஐவர் சுட்டுக்கொலை : மேலும் இரு பெண்கள் கைது



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026