கரீபியன் கடற்பரப்பில் போர் பதற்றம்: அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பின் மதுரோவின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அறிவித்துள்ளார்.
போதைப் பொருள் பயங்கரவாதத்தைத் தடுப்பதாகக் குறிப்பிட்டு கடந்த சில மாதங்களாக வெனிசுவேலா நாட்டுக்கு எதிராக கடல் மற்றும் வான்வழி இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்க அரசு மேற்கொண்டு வருகின்றது.
இந்த நடவடிக்கைகள் மூலம் கரீபியன் மற்றும் பசிபிக் கடல்பகுதியில் போதைப் பொருள் கடத்தியதாக தெரிவித்து இதுவரை 30 இற்கும் அதிகமான கப்பல்களின் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தி மூழ்கடித்துள்ளன.
அவதூறுப் பிரசாரங்கள்
இதனால், 100 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் வெனிசுவேலாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்திக் கொண்டால் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 25 ஆண்டுகளாக வெனிசுவேலாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முயன்று தோல்வியடைந்த முயற்சிகளை முழுவதுமாகக் கைவிட அமெரிக்கா முடிவு செய்தால் அந்நாட்டுடன் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, வெனிசுலா அரசைக் கவிழ்பதற்காக அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா தொடர் அவதூறுப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க ஊடகங்கள் வெனிசுலா குறித்து முழுமையான புரிதலுடன் செய்திகளை வெளியிட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |