தோணி கவிழ்ந்து மாயமான 16 சிறுவன்! காலியில் துயரம்
Police
Galle
Sea
Student
SriLanka
By Chanakyan
காலி தெவட கடற்பகுதியில் தோணி கவிழ்ந்ததில் 16 வயது பாடசாலை மாணவர் இன்று காணாமல் போயுள்ளதாக காலி துறைமுக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் தோணியில் மூன்று பேர் இருந்ததாகவும், மற்ற இருவரும் கரைக்கு நீந்தி உயிர் தப்பியதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
தோணியில் நண்டுகளை பிடிக்க சென்றவேளை, சீரற்ற காலநிலை காரணமாக அலைகளால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தப்பிய இருவருமே காலியில் உள்ள கராபிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
காணாமல்போன மாணவர் கட்டுகோடாவில் உள்ள முல்வட்டா பகுதியைச் சேர்ந்தவர் என முதல்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இவர் இம்முறை கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தகக்து.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்