இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் (Indonesia) சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (17) ஞாயிற்றுக்கிழமை 6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் (6.21மைல்) இந்த நிலஅதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சுனாமி எச்சரிக்கை
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்தநிலையில் இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனமான BMKG, சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
இதேவேளை ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) இந்த நிலநடுக்கத்தை 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் என்று தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் பப்புவா நியூகினியாவில் கடந்த 12 ஆம் திகதி 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை குறப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்