13 ஐ நடைமுறைப்படுத்தினால் கிளர்ந்தெழத் தயார் -மகிந்த முன்னிலையில் தேரர் போர்க்கொடி
13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு மகா சங்கம் ஒருபோதும் இடமளிக்காது என பேராசிரியர் பூஜ்ய இந்துரகரே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் நேற்று (27) இடம்பெற்ற சமய வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாரஹேன்பிட்டி அபயராம விகாரையின் பீடாதிபதி வணக்கத்துக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அந்த ஆலயத்தில் அன்னதான நிகழ்வு இடம்பெற்றது. பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அங்கு உரையாற்றிய களனிப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் வணக்கத்துக்குரிய இந்துராகரே தம்மரத்ன தேரர்.
பிக்குகள் கிளர்ந்தெழத் தயார்
“நம்முடைய தந்தையே நாடு, நம் தாய் புத்தர்.அதனாலேயே எமது நாடு ஒன்றாக உள்ளது. நாட்டை இரண்டாகப் பிரித்து மூன்றாகப் பிரித்து 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படுமாக இருந்தால் அதற்கு எதிராக நாளை பிக்குகள் கிளர்ந்தெழத் தயார்.
எதிர்நிலை ஒன்றுதான்
அதனால் இந்த 13வது அரசியலமைப்பு பற்றி விவாதித்தால் அரசியல் என்று சொன்னாலும் பரவாயில்லை அனைத்தும் தந்தையை பாதுகாப்பதற்காகவே. புத்தரின் போதனைகளை பாதுகாக்கும் ஒரே நாடு இலங்கை.இந்த சம்புத்த முறை உள்ள ஒரே நாடு இலங்கை தான்.இரண்டு மூன்று துண்டுகளாக உடைக்கப்படட்டும் யார் கை தூக்கினாலும் எதிர்நிலை ஒன்றுதான். பிடிக்காதது பிடிக்காது. அது நடந்தால் அது நன்றாக இருக்காது."எனத் தெரிவித்தார்.

