நம்பவைத்து ஏமாற்றிய மகாவலி அதிகார சபை : பொங்கியெழுந்த பண்ணையாளர்கள்
மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களான எங்களை நம்பவைத்து ஏமாற்றியது மகாவலி அதிகார சபையே என்று போராட்டத்தில் ஈடுபட்ட பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று (02) மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.
இங்கு அவர்கள் மேலும் தெரிவித்ததாவது, குளம் அமைத்து தந்தமை, வீதி அமைத்து தந்தமை, புற் தரை தந்தமை, மாட்டிற்கு தண்ணீர் வைப்பதற்கு இடம் தந்தமை என முழுவதையும் தந்தது மகாவலி என்ற நம்பிக்கையை கொடுத்த மகாவலி எங்களுக்கு மயிலத்தமடுவை பெற்றுத்தருவதாக கூறி எங்களிடம் வேலை வாங்கிவிட்டு கபட நாடகமாடுகின்றது.
நிலத்தை ஆக்கிரமிப்பதே மகாவலியின் குறிக்கோளாகும். சிங்களவர்களுக்கு ஆதரவாக இருக்கும் மகாவலி தமிழர்களுக்கு எந்தவிதமான ஆதரவையும் வழங்கவில்லை. மகாவலி என்ற பெயர் இனிமேல் மட்டக்களப்பு மாவட்டத்தில் வரக்கூடாது. ” என தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |