சிலைவைத்து கொண்டாடப்படவேண்டிய வீரராம் மகிந்த
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை இரத்துச் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் மகிந்த ராஜபக்சவை(mahinda rajapaksa) இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திலித் ஜயவீர(dilith jayaweera) குற்றம் சாட்டியுள்ளார்.
சர்வ ஜன அதிகாரம் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மகிந்தவை அவமானப்படுத்துவதே நோக்கம்
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், யுத்தத்தை வெற்றி கொண்ட மகிந்த ராஜபக்சவை இழிவுபடுத்துவதும், அவமானப்படுத்துவதுமே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்காகவே முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை இரத்துச் செய்யும் தீர்மானத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
ராஜபக்ச குடும்பத்தின் பேராசை குறித்து நான் பல தடவைகள் விமர்சித்துள்ளேன். ஆனாலும் மகிந்த ராஜபக்ச என்பவர் சிலை வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய, கௌரவிக்கப்பட வேண்டிய ஒரு வீரர்.
எவ்வளவு தொகையை மிச்சப்படுத்த முடியும்
அரசாங்கம் உங்களது வீரனை வெளியில் போடப் போகின்றோம் என்று தொடர்ச்சியாக அவரை அவமானப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது.
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இரத்துச் செய்வதன் மூலம் எவ்வளவு தொகையை மிச்சப்படுத்த முடியும் என்ற கணக்கு விபரங்களை பகிரங்கப்படுத்த அரசாங்கம் தயாரா? அது தொடர்பான உண்மைத் தகவல்களை வெளியிடுவார்களா என்றும் திலித் ஜயவீர சவால் விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்
