உட்கட்சி பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டும் அநுர அரசு : அர்ச்சுனா எம்.பி வெளியிட்ட தகவல்
தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பியின் உட்கட்சி பூசலை நாடாளுமன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டுவது சிறுப்பிள்ளைத்தனமானது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட கூட்டு நம்பிக்கையில்லா பிரேரணை இன்று(12) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அங்கு சென்றிருந்த இராமநாதன் அர்ச்சுனா வெளியில் வந்து ஊடவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பியின் உட்கட்சி பூசல்
மேலும் கருத்து தெரிவித்த அவர், “வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற முறைமையை கொண்டுள்ள எமது நாடாளுமன்றத்தில் பிரதமரின் பேச்சை அமைச்சர் ஒருவர் மறுதலித்து பேசுவது, சம்பிரதாயத்தை மீறும் செயற்பாடாகும்.
நாம் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பில் விவாதம் ஒன்றை கோரவுள்ளோம். வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தனது கூற்றை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். அத்தோடு சிரேஷ்டத்துவத்திற்கு மதிப்பளித்திருக்க வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பியின் உட்கட்சி பூசலை நாடாளுமன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டுவது சிறுப்பிள்ளைத்தனமானது. ஆனால் அதை நாடாளுமன்றில் தீர்த்துக் கொள்ள முனைவதும் தவறானதாகும்.
நாட்டின் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் நாடாளுமன்றில் தான் கூறுவது அனைத்தும் பொய் என்று சொல்வதென்றால் இருபது வருடங்களாக பொய்தானே கூறியுள்ளார்.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்
