தவறை ஒப்புக்கொண்டார் பிரதமர் மஹிந்த
றம்புக்கணவில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு தொடர்பில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததன் தவறை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஒப்புக்கொண்டுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு பிரதமர் அழைக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
இந்த விடயத்தை தெளிவுபடுத்திய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவரால் அக்கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாமை தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இந்தக் கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் தன்னால் அதில் கலந்துகொள்ளமுடியவில்லை எனவும் தெரிவித்தார்.
றம்புக்கண சம்பவம் தொடர்பான தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது தனது தவறு எனத் தெரிவித்த அவர், எவ்வாறாயினும், இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் தமக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Although I was summoned to the Security Council over the #Rambukkana police shooting, I decided not to go. That's my fault. - @PresRajapaksa
— Manthri.LK_Watch (@ManthriLK_Watch) April 22, 2022
Complete Video
???https://t.co/uXKRL2eb02#SriLanka #EasterSunday #EasterSundayAttacksLK #Colombo #Parliament pic.twitter.com/JA5dKOT16m
