மகிந்த மற்றும் பசில் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!
Basil Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lanka Economic Crisis
Supreme Court of Sri Lanka
By Kanna
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கான வெளிநாட்டு பயணத்தடை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரிய மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உயர் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் தாக்கல் செய்த மனு

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனம் உட்பட மேலும் மூவரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி