வடக்கு, கிழக்கு மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை வழங்கியவர் எனது தந்தையே ! நாமல் பெருமிதம்
விடுதலைப் புலிகளை தோற்கடித்து வடக்கு கிழக்கு மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை வழங்கியவர் ஐந்தாவது நிறைவேற்று அதிபர் மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்டம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நாமல் ராஜபக்ச மேலும் கூறியதாவது,
உண்மையான சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தவர்
சஜித் பிரேமதாச(sajith premadasa), அனுரகுமார திஸநாயக்க (anura kumara dissanayake) வடக்கிற்குச் சென்று 13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தனர்.ஆனால் எனது தந்தை அதிபர் மகிந்த ராஜபக்ச, விடுதலை புலிகளை தோற்கடித்து உண்மையான சுதந்திரத்தை வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு வழங்கியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மக்கள் 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக வாக்களித்து முதலமைச்சரை நியமிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், வடக்கில் வாக்களிக்கும் உரிமையைக் கூட விடுதலை புலிகள் மட்டுப்படுத்தியிருந்தனர் . ஆனால் 13வது திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
அரசியல் ஆதாயங்களுக்காக
வடக்கின் அபிவிருத்தி பற்றி பேசாமல் தேர்தலை எதிர்பார்த்து அரசியல் ஆதாயங்களுக்காக ஏனைய கட்சிகள் வடக்கில் இவ்வாறு பேசுவது உண்மையில் வருத்தமளிக்கிறது.
எனவே 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது குறித்து எவரும் பேசவில்லை.13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன் அதுபற்றி ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் வடக்கில் இந்த விளையாட்டை ஆடுவதால், மக்களின் உணர்வை கருவியாக பயன்படுத்தினர் என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |