தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உழைக்கும் மக்கள் அனைவரும் கைகோர்ப்பார்கள்- மஹிந்த வாழ்த்துச் செய்தி!
உலகளாவிய ரீதியில் இன்று தொழிலாளா தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் ஸ்ரீலங்கா பிரதமர் தொழிலாளர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாகவே இருக்கின்றோமெனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் பரவிவரும் கொரோனா தொற்று நிலைமை காரணமாக, கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் பேரணிகள், கூட்டங்களின்றி சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சர்வதேச தொழிலாளர் தின செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் இத தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கையின் உழைக்கும் மக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றி, மே தினத்தை புதிய வழியில் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“மக்கள் நலன் சார்ந்த பணியிடம் பாதுகாப்பான தேசம்” எனும் தொனிப்பொருளிலான இவ்வாண்டு மே தினத்தில் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உழைக்கும் மக்கள் அனைவரும் கைகோர்ப்பார்கள் என்று தாம் நம்பிக்கை கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.