தீர்க்கமான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர் மஹிந்த
ஆளுங்கட்சித் தலைவர்களுக்கு இடையிலான தீர்க்கமான கலந்துரையாடல் எதிர்வரும் 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
இதற்கான அழைப்பினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கூட்டணிக்குள் இருக்கின்ற கட்சித் தலைவர்களுக்கு விடுத்திருப்பதாக அலரிமாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய இந்தச் சந்திப்பானது 4ஆம் திகதி காலை 6.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது. பிரதமர் தலைமையில் கடந்த 19ஆம் திகதி கட்சித்தலைவர்கள் சந்திப்பு அலரிமாளிகையில் நடைபெற்ற போதிலும், கட்சித்தலைவர்கள் அல்லாதவர்களும் பங்கேற்றிருந்ததால், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சில அமைச்சர்கள் அதனைப் பகிஷ்கரித்திருந்தனர்.
புறம்பான கட்சித் தலைவர்களுக்கு சந்திப்பை ஏற்பாடு செய்யும்படியும் பிரதமரிடம் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
அதற்கமைய மாகாண சபைத் தேர்தல், கொழும்பு போர்ட் சிட்டி விவகாரம் உட்பட ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடிகள் பற்றி எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறும் கட்சித் தலைவர்கள் சந்திப்பில் பேசப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.