அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுத்த பங்காளிக் கட்சிக்களை மகிழ்ச்சிப்படுத்திய மகிந்த!
சிறிலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் தலைவர் பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) வெளியிட்ட கருத்துக்களால் அரச பங்காளிக் கட்சிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றன என்று அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச தலைமைக் கட்சியான சிறிலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்கும், பங்காளிக் கட்சிகளுக்குமிடையில் அண்மைக்காலமாக கடும் மோதல் இடம்பெற்று வருகின்றது. முடியாவிட்டால் அரசிலிருந்து வெளியேறுமாறு பங்காளிகளுக்கு மொட்டு கட்சி அறிவிப்பும் விடுத்துவிட்டது.
மறுபுறத்தில் பங்காளிகளும் மொட்டுக் கட்சி மீது கடும் விமர்சனக்கணைகளால் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) நெருக்கடியான சூழ்நிலையில் எம்முடன் பயணித்த கட்சிகளை ஓரங்கட்டக்கூடாது. பங்காளிக் கட்சிகள் என்பவை கைப்பாவைகள் அல்ல. எனவே கூட்டணியின் ஐக்கியத்தை காக்க வேண்டிய பிரதான பொறுப்பு தலைமைக் கட்சிக்கே இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,