விமல் வீரவன்ச அணியுடனான சந்திப்பை திடீரென இரத்துச் செய்தார் மகிந்த
meeting
postponed
mahinda rajapaksha
wimal weeravansa
By Sumithiran
அமைச்சர் விமல் தலைமையிலான அணியை சந்திக்கும் திட்டத்தை திடீரென ஒத்திவைத்தார் பிரதமர் மகிந்த ராஜபக்ச.
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீதப் பங்கை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு அளிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான அணியினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இத்தாலியிலிருந்து நாடுதிரும்பிய பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களை இன்று சந்திக்க அளித்த சந்தர்ப்பத்தை இரத்து செய்துள்ளார்.
எனினும் நாளை வியாழக்கிழமை இந்த சந்திப்பு மாலை 04 மணிக்கு அலரிமாளிகையில் நடத்தப்படும் என்று அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சந்திப்பு இன்று நண்பகலில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.