மகிந்தவின் உடல்நிலை குறித்து வெளியான தகவல் : நலமுடன் இருப்பதாக உறவினர்கள் தெரிவிப்பு
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நலமுடன் இருப்பதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மகிந்த ராஜபக்ச சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது மகிந்த ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமனாரின் இறுதிச் சடங்கில் மகிந்த கலந்து கொள்ளவில்லை என்றும் , மகிந்த சுகவீனமுற்று இருந்ததன் காரணமாக கலந்து கொள்ளவில்லை எனவும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டது.
அந்த வதந்திகளைப் பொய்யாக்கும் வகையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று (27) பாமன்கடை ஸ்ரீமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்தி தொகுப்பில் காண்க.