மகிந்த ராஜபக்சவின் சாரதியா கஜ்ஜா..!
12 வருடங்களாக அடையாளம் காண முடியாதிருந்த கஜ்ஜா என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்குப் பின்னால் அரசியல் இருக்கின்றதா இல்லையா என்பது தெரியாது ஆனால், இன்று பத்திரிகை ஒன்றில் கஜ்ஜா என்பவர் மஹிந்த ராஜபக்சவின் சாரதியாகச் செயற்பட்டவராகக் குறிப்பிடப்பட்டுள்ளது என பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விசாரணைகளுக்குத் தடைகள்
சாதாரண பொது அறிவுக்கு அமைய இந்த சம்பவங்களுக்குப் பின்னால் அரசியல் இருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அரசியல் தொடர்புகள் காரணமாகவே விசாரணைகளுக்குத் தடைகள் ஏற்பட்டுள்ளது.
எனினும் எந்தவொரு நபரும் தாம் செய்ததைஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஆகவே, இது ஏனைய விசாரணைகளைப் போன்று சாதாரண விடயமல்ல.
அரசியல், பொது அறிவுக்கு அமைய இவர்களே இதனை செய்தார்கள் என்று கூறினாலும் உரிய சாட்சியங்கள் தேவை. சாட்சியங்களை அழித்தே அனைத்தையும் செய்து முடிதுள்ளார்கள் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
