மகிந்தவுக்கு சுகயீனம் : மொட்டுக்கட்சியில் இணைவாரா ரணில்!
எதிர்வரும் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்தும், அமைச்சரவை மாற்றம் குறித்தும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்வரும் அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து போட்டியிடுமாறு ரணிலுக்கு நெருங்கிய வட்டாரங்கள் ஆலோசனை வழங்கி வருகின்றன.
அதாவது பொதுஜன பெரமுனவில் நிமல் லன்சா உடன் அல்லது அநுர யாப்பா அபேவர்தனவுடன் சரி சேர்ந்து அதிபர் தேர்தலுக்கு களமிறங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
யார் என்னதான் சொன்னாலும் அதிபர் ரணில் விக்ரமசிங்க அனைத்தையும் கேட்டுவிட்டு அமைதியாக இருந்துவருவதாக கூறப்படுகிறது.
இதுவரை எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.
இந்நிலையில், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவும் இந்நாட்களில் சுகயீனமுற்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
