ஒருபோதும் ஏற்கோம் - சீனாவுக்கு மகிந்த தெரிவித்த விடயம்
china
mahinda rajapaksha
organic fetilizer
By Sumithiran
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கப்பலில் உள்ள சேதன பசளையை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa)கொழும்பிலுள்ள சீனத்தூதுவர் ஷென்ஹோன்(Shenhon) இடம் தெரிவித்துள்ளார்.
சீன தூதுவர் நேற்று பிற்பகல் அலரிமாளிகையில் பிரதமரை சந்தித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
தமது நாடு கோரும் அளவுகோல்களுக்கு அமைவாக வழங்கப்படும் உரத்தை மாத்திரமே ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளோம் என பிரதமர் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார்.