மகிந்தவின் நாயை காணவில்லை! தேடுதலில் சிக்கிய யுவதி (படங்கள்)
Sri Lanka Police
Mahinda Rajapaksa
By Kiruththikan
வீரகெட்டிய, கார்ல்டன் தோட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது பிரதமர் மகிந்த ராஜபக்சவின் நாய்க்குட்டி காணாமல் போயுள்ளது.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில அந்த நாய்க்குட்டியை வைத்திருந்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வீட்டின் முன் இருந்த நாய்க்குட்டியை வீட்டிற்கு கொண்டு வந்ததாக அந்த யுவதி கூறிய போதிலும் கார்ல்டன் தோட்ட பாதுகாப்பு அதிகாரிகள் யுவதியை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகிறது.
கைது செய்யப்பட்டவர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வீரகெட்டிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் மகள் என தெரியவந்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தோட்டத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட போது அந்த யுவதி அங்கிருந்த நாய்க்குட்டியை எடுத்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்