மகிந்தவின் டுபாய் விஜயம் இரத்து
visit
Yoshitha Rajapaksa
dubai
canceled
Mahinda Rajapaksha
By Sumithiran
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksha) டுபாய் விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எக்ஸ்போவில் இலங்கைக்கான தேசிய தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஜனவரி 3 ஆம் திகதி நிகழ்வின் பிரதம அதிதியாக வருகை தருமாறு டுபாய் ஆட்சியாளரான மொஹமட் பின் ரஷீத் அல் மக்தூமினால்(Mohammed bin Rashid Al Maktoum) பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்தநிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி பிரதமர் டுபாய் செல்வதற்கு திட்டமிட்டிருந்தார்.
எனினும் நாட்டின் பிரச்சினைகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மத்தியில் பிரதமர் ராஜபக்ச அடுத்த வாரம் திட்டமிடப்பட்ட டுபாய் பயணத்தை இரத்து செய்துள்ளதாக பிரதமரின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ச (Yoshitha Rajapaksa)தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி