அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்த மகிந்த: நாடாளுமன்றில் ஆற்றிய விசேட உரை
Parliament of Sri Lanka
Mahinda Rajapaksa
Sri Lankan Peoples
By Dilakshan
பொருளாதாரம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் விசேட உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது, தங்களுக்கு எதிராக இந்த சபையில் பொருளாதாரம் தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாகவும் அவை அனைத்தையும் அவர் நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் உரிமை
மேலும், யாரோ ஒருவரின் உரிமையை பறிக்கப் போராடுபவர்கள் நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்க போராட வேண்டும் என்றும் நாடாளுமன்றில் மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, நாங்கள் வரலாற்றில் மக்களின் வாழ்வுரிமையைப் பெற்றுத் தந்ததன் மூலம் எமது கடமையை நிறைவேற்றியுள்ளோம். எனவே, அதை ஒழிக்க வேண்டும் என்று பேசுபவர்களுக்கு மக்களின் உரிமையைப் பாதுகாப்பது கடினம் எனவும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி