தடையின்றித் தொடரும் - பிரதமர் உறுதி
கொரோனா வைரஸ் பரவலின் மத்தியிலும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடையின்றி தொடரும் என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாண கால்வாய் திட்டத்தின் கட்டுமாணப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், இந்த நாட்டில் ஆரோக்கியமான மக்கள் தொகையை உருவாக்குவதற்கும், உள்ளூர் உற்பத்திகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்குமான நடவடிக்கையையே அரசாங்கம் மேற்கொள்கின்றது.
யுத்தத்தின் போது கூட நாங்கள் நாட்டை அபிவிருத்தி செய்தோம். அதேபோல கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் அபிவிருத்திகளை நிறுத்த மாட்டோம்.
நோய்வாய்ப்பட்ட உலகத்தின் மத்தியில் ஆரோக்கியமான அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.