விடாத இருமலால் அவதிப்படும் மகிந்த

Mahinda Rajapaksa Sri Lankan political crisis
By Dharu Apr 06, 2026 12:29 AM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பது குறித்து சமூகத்தில் நடைபெற்று வரும் விவாதத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கும் வகையில், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில எழுதிய 'ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடுதல்' என்ற புத்தகம் சமீபத்தில் கொழும்பில் வெளியிடப்பட்டது.

முன்னாள் அரச புலனாய்வுத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது சில அரசியல் குழுக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருக்கும் சூழலில், இத்தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று கம்மன்பில தனது புத்தகத்தில் வலியுறுத்துகிறார்.

உளவுத்துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவில், நாட்டிற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த உளவுத்துறை அதிகாரிகளின் சேவையையும் விருந்தினர்கள் பாராட்டினர்.

இஸ்ரேலின் ஹைஃபா நகரை நேரடியாக தாக்கிய ஈரானிய ஏவுகணை

இஸ்ரேலின் ஹைஃபா நகரை நேரடியாக தாக்கிய ஈரானிய ஏவுகணை

அரசாங்கத்தில் சில சலசலப்பு

முருத்தெட்டுவ தேரர் தலைமையில் நடைபெற்ற இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் பெருந்திரளான பிக்குகள் கலந்துகொண்டனர். அரசாங்கத்தின் சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை.

விடாத இருமலால் அவதிப்படும் மகிந்த | Mahinda Suffers From A Cough

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சித் மத்தும பண்டார, தலதா அத்துகோரல, சாகல ரத்நாயக்க, நாமல் ராஜபக்ச, சரத் என். சில்வா மற்றும் வாசுதேவ நனயக்கார உள்ளிட்ட இரு கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல அரசியல் பிரமுகர்கள் ஒரே மேடையில் கூடியிருந்தது, எதிர்கால எதிர்க்கட்சி கூட்டணியின் ஒரு முன்னோடியாகக் கருதப்பட்டதுடன், அது அரசாங்கத்தில் சில சலசலப்புகளையும் ஏற்படுத்தியது.

நிகழ்ச்சியின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்ட இருமல் காரணமாக, மண்டபத்தில் உள்ள குளிரூட்டிகளை அணைக்க கம்மன்பில தயாராக இருந்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று விவரித்துள்ளது.

ஈரானுடனான சாத்தியமான உடன்பாடு! யூகங்களை கிளப்பிய ட்ரம்பின் பதிவு

ஈரானுடனான சாத்தியமான உடன்பாடு! யூகங்களை கிளப்பிய ட்ரம்பின் பதிவு

ஐக்கிய தேசியக் கட்சி முரண்

ஆனால், மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, முன்னாள் ஜனாதிபதி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதுகாப்புப் பணியாளர்களிடம் ஒரு குவளை சுடுநீரை மட்டும் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

விடாத இருமலால் அவதிப்படும் மகிந்த | Mahinda Suffers From A Cough

இந்நிகழ்ச்சியில் ஐக்கிய தேசியக் கட்சிப் பிரதிநிதிகளின் பங்கேற்பு, கட்சிக்குள்ளேயே ஒரு விவாதத்தையும் கிளப்பியது.

நிகழ்ச்சியின்போதே, கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, தினித் சிந்தக மற்றும் தனுக்க கருணாரத்ன ஆகியோர் இவ்விவகாரம் குறித்து விவாதித்தனர்.

மேலும், முன்னாள் பாதுகாப்புத் தலைவரின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு சமூக ஊடகங்களில் அறிவிக்கப்படும் என்றும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இதற்கிடையில், கட்சியின் பிரதித் தலைவர் நவீன் திசாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சிப் பிரதிநிதிகளின் பங்கேற்பு குறித்து தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், தாம் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்றும், கட்சித் தலைவர்களின் பங்கேற்பு குறித்து வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

ட்ரம்பின் கருத்துக்கு மத்தியில் மீண்டும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலைகள்

ட்ரம்பின் கருத்துக்கு மத்தியில் மீண்டும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலைகள்

சர்வதேச விசாரணை 

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சியின் தலைவர்கள் கலந்துகொண்டது கட்சிக்குள் ஒரு கடுமையான விவாதத்தையும் தூண்டியது.

விடாத இருமலால் அவதிப்படும் மகிந்த | Mahinda Suffers From A Cough

ஈஸ்டர் தாக்குதல்கள் ஒரு சதி என்ற கட்சியின் கருத்துக்கு முரணான ஒரு நிகழ்வில் கலந்துகொண்டதற்காக, சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரை முஜிபுர் ரஹ்மான் மற்றும் நளின் பண்டார போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாகக் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர், யாரையும் விடுவிப்பதற்காகவோ அல்லது அரசியல் ஆதாயம் பெறுவதற்காகவோ அல்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தனது கடமையை நிறைவேற்றுவதற்கும், வெவ்வேறு சித்தாந்தங்களைப் புரிந்துகொள்வதற்கும் அழைப்பின் பேரில் அங்கு சென்றதாகச் சுட்டிக்காட்டினார்.

தாக்குதல்கள் குறித்து ஒரு பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை அவசியம் என்ற தனது நிலைப்பாடு மாறவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்

கட்சியின் பொதுச் செயலாளரும், புத்தகத்தில் உள்ள சில கருத்துக்களுடன் தன்னால் உடன்பட முடிந்தாலும், முழுமையான கருத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான ஒரு கலந்துரையாடலின் போது, ​​எதிர்க்கட்சித் தலைவரின் பயணம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம் விசாரித்தபோது, ​​அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று  அவர் தெரிவித்ததாக மேற்படி ஊடகம் சுட்க்காட்டியுள்ளது.

ட்ரம்பின் கருத்துக்கு மத்தியில் மீண்டும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலைகள்

ட்ரம்பின் கருத்துக்கு மத்தியில் மீண்டும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026