சீன இராணுவத்துக்கு மகிந்த தெரிவித்துள்ள ‘நன்றி’
சீன இராணுவத்துக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
சீன இராணுவத்தினரால் ஸ்ரீலங்கா முப்படையினருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 3 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்றைய தினம் நாட்டை வந்தடைந்துள்ள நிலையிலேயே அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது ருவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மகிந்த,
இன்று காலை இலங்கைக்கு வந்த சினோபார்ம் தடுப்பூசியின் 300,000 டோஸ்களை நன்கொடையாக வழங்கிய சீனஇராணுவத்திற்கு நன்றி. ஸ்ரீலங்காவில் தடுப்பூசி இயக்கம் வெற்றிகரமாக இருப்பதை உறுதி செய்ய பெறப்பட்ட உதவிகளுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
I thank the #PLA of #China for their donation of the 300,000 doses of the #Sinopharm vaccine that arrived in #lka this morning. Grateful for the outpouring of assistance received to ensure the vaccination drive in #SriLanka is a success. pic.twitter.com/ruDtuAsImy
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) August 28, 2021