மஹிந்தவிற்கு ஏற்பட்ட கவலை - இத்தாலி புறப்படும் போது வந்த மனவருத்தம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை தனது அதிகாரிகளுடன் இத்தாலி நோக்கி பயணித்துள்ளார். நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே பிரதமர் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் பிரதமர் மிகவும் மனவருத்தமடைந்த நிலையிலேயே இத்தாலிக்கு பயணம் மேற்கொள்வதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அண்மையில் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை வெளியிட்ட கருத்துக்களினால் பிரதமர் மனவருத்தமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கர்தினாலுக்கு யாரோ கூறியதனை, ஊடகம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு நெருக்கமானவர்களிடம் குறிப்பிட்டுள்ளார். தன்னை தொடர்பு கொண்டிருந்தால் உண்மை எது? பொய் எதுவென அறிந்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னிடம் நேரிடியாக கர்தினால் பேசியிருக்கலாம். அதற்கான அனைத்து சந்தர்ப்பங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,