கொரோனா தொற்றாளர் அடையாளம்: நாடாளுமன்றத்திலுள்ள மூன்று அலுவலகங்களுக்குப் பூட்டு
சபாநாயகரின் அலுவலகத்தை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் வாகனத்திற்கு முன்னாள் செல்லும் வாகனத்தின் சாரதி மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்றியமையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றியுள்ள உப பொலிஸ் பரிசோதகர் நாடாளுமன்றத்தில் உள்ள அஞ்சலகத்திற்கு சென்று முத்திரைகளையும் கொள்வனவு செய்துள்ளதால், அஞ்சல் அலுவலகமும் மூடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த பொலிஸ் அதிகாரி பயணித்த நாடாளுமன்ற மின் தூக்கியில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தை சேர்ந்த சிலர் பயணித்துள்ளமை பாதுகாப்பு கெமரா மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகரின் அலுவலகம், அஞ்சல் அலுவலகம், எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் உட்பட நாடாளுமன்றத்தில் சில துறைகளில் பணியாற்றும் 25 பேருக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.