பொதுமக்களுக்கு காவல்துறை விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
சட்டவிரோதமான முறையில் சொத்துக்கள் பெறப்பட்டதாகவோ அல்லது அசாதாரணமான சொத்துக்கள் பெறப்பட்டதாகவோ சந்தேகத்திற்கிடமான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அறிவிக்குமாறு காவல்துறை தலைமையகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக 1917 என்ற குறுகிய தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக 24 மணிநேரமும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நபர்கள் பல்வேறு வழிகளில் முறைகேடான சொத்துக்களை சம்பாதித்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளுக்கு பொதுமக்களின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்காக சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு என்ற புதிய புலனாய்வுப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியின் கீழ் இந்தப் பிரிவு இயங்கி வருகிறது.