ராஜபக்ச மும்மூர்த்திகள் தலைமையில் நாளை முக்கிய கூட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோரின் பங்குபற்றலுடன் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் நாளை மாலை 6 மணிக்குநடைபெறவுள்ள இந்த சந்திப்பில் கட்டாயம் பங்கேற்குமாறு ஆளும் கட்சி எம்.பிக்களுக்கு பணிப்பபுரை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் 19 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு மறுநாள் 20 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த நம்பிக்கையில்லா பிரேணை தொடர்பில் ஆளும் கட்சி எம்.பிக்கள் எவ்வாறு செயற்படவேண்டுமென்பது தொடர்பில் இந்த கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
அத்துடன் அண்மைக்காலமாக ஆளும் கட்சியில் நிலவும் கருத்துவேறுபாடுகள் தொடர்பிலும் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.